சென்னை வடபழனியை சேர்ந்தவர் பிரபல்லா சுபாஷ் (எ) ரொபினா. இவர் சென்னையில் வானொலி தொகுப்பாளினியாக உள்ளார். இவர் கடந்த 23-ஆம் தேதியன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.

அதில், “பிரபல்லா சுபாஷ் (எ) ரொபினா சென்னையில் வானொலி தொகுப்பாளராகவும் நேரோ ஊடகத்தில் பார்ட்னராகவும் உள்ளேன். 2015-ல், எனக்கு சிறந்த தொழில் முனைவோராக ‘இந்தியா ஒன்’ என்ற அமைப்பின் மூலம் தேர்ந்தடுக்கப்பட்டு எனக்கு பரிசு வழங்கும் விழாவில் திரு. அன்வர்ராஜா M.P. அவர்களின் மகன் திரு. நாசர் அலி எனக்கு அறிமுகம் ஆனார். தனக்கு ஊடக தொழிலில் மிகுந்த விருப்பம் இருப்பதாகவும் அதற்க்கு தகுந்த ஒரு பார்ட்னர் தேடிக்கொண்டு இருப்பதாகவும், தாங்கள் அதற்க்கு சரியான ஆளாக இருப்பதாகவும் ஆசை வார்த்தை கூறினார். எனக்கும் ஊடக தொழிலில் முன்னேற வேண்டுமென்ற ஆவல் இருந்த காரணத்தினால் திரு. நாசர் அலி அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டேன்.

பின்னர் எனது அலவலகத்திற்கு வந்து செல்வார். இதற்கிடையே ஒரு நாள் தான் விவாகரத்து செய்துவிட்டு வாழ்வதாகவும், எனவே என்னை திருமணம் செய்துகொள்வதாகவும் கூறினார்.

Prafulla alias Roheena

கணவன் மனையவாக வாழ்ந்தோம்

அவரது பேச்சால் கவரப்பட்ட நான் அவருடன் மனைவி போல் வாழ்ந்தேன். ஒருநாள் என்னை மதம் மாற வேண்டும் எனவும், அப்போது தான் திருமணம் செய்துகொள்ள முடியும் என்றும் கூறினார். அவரது பேச்சால் நான் மதமும் மாறினேன். பின்னர் நாங்கள் இருவரும் வடபழனில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், வாடகைக்கு வீடு எடுத்து வசித்தோம். அங்கு கணவன்-மனைவியை போன்றே வாழ்ந்தோம். அங்கிருந்த அக்கம்பக்கத்தினரும் எங்களை தம்பதிகள் என்றே எண்ணினர். ஒருநாள் நாசர் அலி என்னிடம் வந்து, புதிதாக தொழில் தொடங்கப்போவதாக கூறினார். அவர் பேச்சை நம்பி நானும் என்னிடம் இருந்த பணம், நகை எல்லாம் கொடுத்தேன். ஆனால் அதைப் பெற்றுக்கொண்டு, அவர் என்னை விட்டுச் சென்றுவிட்டார்.

தற்போது என்னைப் போலவே ஆசை வார்த்தைக் கூறி வேறொரு பெண்ணை திருமணம் செய்யப்போகிறார். இதையறிந்து நான் அவரிடம் எனது பணம், நகையை திருப்பிக் கொடுக்குமாறும், எனது வாழ்வை சீரழித்தது தொடர்பாகவும் கேட்டேன். ஆனால் அவரது தந்தை எம்.பி. அன்வர்ராஜா மற்றும் அவரின் உதவியாளர் தேவா ஆகியோர் என்னை உடல் ரீதியாகவும், மனரீதியாதகவும் துன்புறுத்தியதோடு, கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டினார்கள். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் வரும் மார்ச் 25ஆம் தேதி நடக்கவுள்ள நாசர் அலியின் திருமணத்தையும் தடுத்து, எனக்கு வாழ வழிவகை செய்ய வேண்டும்” எனவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் காரைக்குடி ஜமாத்தால் நிறுத்தப்பட்ட அதிமுக எம்.பி. அன்வர் ராஜாவின் மகன் நாசர் அலியின் திருமணம் மற்றொரு ஜமாத்தால் நடத்தப்பட்டது. காரைக்குடி காலேஜ் பள்ளி வாசலில் இன்று திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில், பாதிக்கப்பட்டதாக கூறும் பிரபல்லா; மண்டபத்தின் வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். திருமணம் செய்துகொள்வதாக கூறி நாசர் அலி தன்னை ஏமாற்றியதாகவும் ஜமாத்தாரிடம் புகாரளித்தார். இதை தொடர்ந்து அவரது திருமணத்தை நிறுத்திவைப்பதாக ஜமாத் உறுப்பினர்கள் அறிவித்தனர். பின்னர், வேறு ஒரு ஜமாத் மூலம் திருமணம் நடைபெற்றது. தான் எவ்வளவோ போராடியும் நாசர் அலிக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றதை அறிந்த பிரபல்லா, கண்ணீர் விட்டு கதறி துடித்து அழுதார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *